Sunday, 27 December 2009

செக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி!



ஆந்திராவிற்கு இது அந்திம காலமோ என்னவோ, அடுத்தடுத்த அட்டாக்கில் அல்லு ஆடி நிற்கிறது... இப்போது நடந்த அட்டாக் பிரிப்பது சம்பந்தமாக இல்லை, சேர்ந்திருப்பது சம்பந்தமாக... 50லும் ஆசை வரும் என்பதை இனி 85லும் ஆசை வரும் என்று மாற்றிக்கொள்ளலாம் போல... காமத்திற்கு கண்களும் இல்லை வயதும் இல்லை என்பதை உலகுக்கு நிரூபித்திருக்கிறார் ஆந்திர மாநில கவர்னர் என்.டி.திவாரி.

இவர் அனுபவம் வாய்ந்த திறமையான காங்கிரஸ்காரர். மூன்று முறை உத்திரபிரதேசத்தின் முதல் மந்திரியாகவும், ஒரு முறை உத்திரகாண்டின் முதல் மந்திரியாகவும் இருந்திருக்கிறார். தவிர மத்திய அமைச்சராக இவர் இல்லாத முக்கிய போர்ட்ப்போலியோவே இல்லை எனலாம். தொழில்த்துறை, வணிகத்துறை, எரிவாயுத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை என்பவை இதில் அடக்கம்... கூடவே திட்டக்கமிஷன் சேர்மன் பதவி, சரன் சிங்கின் ஜனதா ஆட்சியில் மந்திரி பதவி போன்றவைகளும் உண்டு.

ராஜிவ் காந்தி இறந்தபோது அடுத்த பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இவர்தான் முதலிடத்தில் இருந்தார். இவரின் போதாத காலம், நம்ம நல்ல காலம் அந்த தேர்த்லில் அவர் தோற்றதால் (நல்ல வேளை... பார்லிமெண்ட் வளாகத்தில் ஏதும் நடந்து தொலைக்காமல் போனது...) ஆலமரத்துக்கு கீழ கிடந்தவனுக்கு ஹார்லிக்ஸ் கிடைச்ச மாதிரி நரசிமராவுக்கு அடித்தது அந்த அதிர்ஷ்டம். அத‌ன்பிற‌கு அர்ஜுன் சிங்குட‌ன் இணைந்து த‌னி க‌ட்சி ஆர‌ம்பித்து, வியாபார‌ம் ச‌ரியில்லாததால் கட்சி க‌டையை மூடிவிட்டு சோனியாகாந்தி தலை‌மையில் மீண்டும் காங்கிர‌ஸில் இணைந்து க‌வ‌ர்ன‌ர் ப‌த‌வியை வ‌ங்கிக்கொண்டு ஆந்திராவிற்கு வந்து சேர்ந்தவர்.

இப்படிப்பட்டவர் மூன்று பெண்களுடன் கொஞ்சி குழாவி சல்லாபத்தில் இருந்த  காட்சிகளை எப்படியோ சுட்டு உலகத்துக்கு காட்டி புண்ணியத்தை வாங்கிக்கொண்டது ஏபிஎன் ஆந்திர ஜோதி சேனல்... தெலுங்கானா தெலுங்கானா என்று பித்துபிடித்து தெரு தெருவாய் திரிந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த மூன்று பெண்களும் கவர்னர் மாளிகைக்கு வேலைக்காக எடுக்கப்பட்டவ‌கள் (எந்த வேலைக்கு...) என்கிறது மாளிகை வட்டாரம்... ஆனால் இவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதும், அவர்களை மாளிகைக்கு அனுப்பி வைத்தது திவாரியின் சொந்த ஊரான உத்ரகாண்டை சேர்ந்த ராதிகா என்பதும் வெளியுலக செய்தி. இந்த ராதிகா எப்போது ஆந்திரா வந்தாலும் அவருக்கு கவர்னர் மாளிகைத்தான் கெஸ்ட் ஹவுஸாம்( அட கஷ்டகாலமே...). ராதிகாவுக்கு கல்குவாரி குத்தகையை எடுத்து தருவதாக திவாரி கூறியிருக்கிறார், ஆனால் அதை செய்யாமல் இழுத்தடித்ததால் கோபத்தில் இருந்த ராதிகாதான் இந்த வீடியோ எடுக்க ஏற்பாடு செய்தவர்... இதை தனியார் தொலைக்காட்ச்சிக்கு கொடுக்கப்போவது தெரிந்து மிரட்டியிருக்கிறது திவாரி குரூப், அதையும் மீறி இதை அந்த தனியார் தொலைக்காட்சிக்கு தாரைவார்த்திருக்கிறார் ராதிகா அம்மணி.

அந்த மூன்று பெண்களில் ஒருவர் கர்ப்பவதியாம் (இதெல்லாம் அடுக்குமா திவாரி) இந்த விசயத்தில் கவர்னரின் தனி அதிகாரி (இப்ப தான் தனி அதிகாரின்னா என்னாங்கற அர்த்தமே புரியுது) அரவிந்த் சர்மாவுக்கும் தொடர்பு உண்டாம் (என்ன மாதிரி தொடர்புன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க‌ அரவிந்த்...). இன்னும் இதில் எம்பி, எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு இருக்காம் (இவர்களுக்கு எதில் தான் தொடர்பில்லை) இவரை சந்திக்க யாரும் மாளிகை வந்தால், திவாரி 'அந்த' அறையிலிருந்து வந்து தான் சந்திப்பாராம்... சந்திப்பு முடிந்தாதும் திரும்பியும் அங்கே சென்று விட்ட இடத்திலிருந்து முகாரியை தொடருவாராம்... (என்ன பாஸ்... தமிழக இளைஞர்களை தன் சேவையால் ரட்சித்துக் கொண்டிருக்கும் சேலம் சித்த வைத்திய சிரோன்மணி தாத்தாவிடம் ஏதும் லேகியம் வாங்கி சாப்புடுறீங்களா என்ன...)



சமீபத்தில் முன்னால் மத்திய மந்திரி ஷேர் சிங்கின் 29 வயது பேரன் ரோகித் சேகர் தான் திவாரியின் மகன் என்றும் (கர்மமடா சாமி... இதே வேலையாத் தான் இருந்திங்களா திவாரி சார்... இன்னும் உங்க குப்பையை கிண்டுனா என்னென்ன வரப்போகுதோ...), இதை மரபணு சோதனையின் மூலம் நிரூபிக்கத் தயார் என்றும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரோகித் 18 வயதை கடந்து விட்டதால் அந்த‌ வழக்கை தள்ளுபடி செய்த்து நீதிமன்றம்... (என்ன நீதியிது... 18 வயது ஆகிவிட்டால் இழைக்கப்பட்டால் அநீதியும், உண்மையான தந்தை யார் என்பது பற்றிய நீதியும் மறைக்கப்பட்டு விடுமா...) தலை தப்பியதடா சாமி என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டவர், மாநில‌மே தெலுங்கானாவில் ஆட்ட‌ம் க‌ண்டு நிற்க, அதுபற்றியெல்லாம் கவலையின்றி  தன் ஆட்டத்தை தொடர்ந்தார்... அப்படி இருந்தவரைத் தான் நடுதெருவில் கொண்டுவந்து நிறுத்தி கும்மியடிக்க வைத்து விட்டார் ராதிகா.

தெலுங்கானாவை விட்டு விட்டு இந்தப் பக்கம் கவனத்தை திருப்பலாம் என்று ஆந்திர எதிர்கட்சிகளும், மாதர் சங்கங்களும் எத்தனித்து, உருவ பொம்மை எரித்து, போராட்டம் தொடங்கியதுமே உடல் நிலை(!) சரியில்லை என்று கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் திவாரி... சரி, இத்தோடு முடிந்து விட்டதா இந்த பிரச்சனை என்பது தான் கேள்வி... சாதாரண ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஆதாரத்தோடு சிக்கினால் அவர்களை விபச்சாரத் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, தண்டனை வாங்கிக்கொடுக்கும் காவல்துறை... ஆனால் இங்கே வீடியோ ஆதாரத்துடன் சிக்கியிருக்கிறார் திவாரி, அவரை ஏன் கைது செய்யவில்லை... அவரின் மீது ஏன் எந்த வழக்கும் தொடரப்பட‌வில்லை... கட்சிகள் திவாரியின் ராஜினாமாவைத் தான் கேட்டார்களே ஒழிய, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய சொல்லி போராடவில்லை... ஏன்?  நியாயமும், நீதியும், சட்டமும் மனிதனுக்கு மனிதன் மாறுபடுமோ... நீங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்!

3 comments:

Paul Venkat said...

எதையும் விமர்சிக்க ஒரு தைரியம் வேண்டும்
அரசியல்வாதியோ நடிகர்களோ விமர்சிப்போம்
குற்றத்தை எடுத்துரைக்க நக்கீரனாவோம் என்ற
கொள்கையுடன் இருக்கும் சபாவை பாராட்டுகிறேன்

Suresh Sethuramaswamy said...
This comment has been removed by the author.
Suresh Sethuramaswamy said...

Saba ji, Sabash ji,