நாலிரெண்டு மாதங்கள் அயிற்று
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்து
மற்றொரு நட்பு உன்னை
எனக்கு அறிமுகப்படுத்திய
அந்த நாள் தான் இதுவரை
என் வாழ்வில் இனிய நாள்!
நீ கை கொடுத்தாய்
நானும் கை கொடுத்தேன்
உடலில் ரசாயன மாற்றம்
உயிரில் மின்சார தாக்கம்!
கைகள் பிரியும் போதுதான்
உன் கண்களை கண்டேன்
பார்வையா அது
பாதரசத்தின் ஒலி
அக்னியின் அனல்
அணுவின் கதிர் வீச்சு
அன்றிலிருந்து அதுவே
ஆனது என் உயிர் மூச்சு!
அதன் பிறகு
நான் பார்க்கும் போது நீயும்
நீ பார்க்கும் போது நானும்
பார்க்கமுடியவில்லை நம்மால்!
நீ தூர இருக்கையில்
துடிப்பாய் ரசிக்கின்றேன்
நெருங்கி வருகையில்
நெருப்பில் குளிர்கிறேன்!
உன் சபீமம் தான்
என்னை சடமாக்குகிறது
உன் அருகாமை தான்
என்னை அடக்கி வைக்கிறது!
உன் பார்வையை சந்திக்கும்
கடினமான செயலை
என்னால் செய்யமுடியவில்லை
உன் பேச்சை அறுத்து
பேசிவிடும் தைரியம்
என்னிடம் எப்போதுமில்லை!
உன் அண்மையின் வாசத்தில்
என் சுவாசம் இறக்கிறது
அந்த காந்த பார்வையில்
என் தேகம் தீயாய் எரிகிறது!
உன் கூந்தல் உதிர்த்த
மல்லிகை மலர்கள்
என் இதயத்தில் விழுந்து
தினம் வாசம் செய்கிறது!
உன் இதழ்கள் உதிர்த்த
புன்னகைப் பூக்கள்
என் பருவத்தில் விழுந்து
மனவாசம் செய்கிறது!
நீ எங்கிருந்தாலும்
என் நினைவிலிருக்கிறாய்
எனவே தான் எப்போதும்
என் உயிரில் மிதக்கிறாய்!
பார்க்க பேச பழக
உன்னை தவிர மற்ற
எல்லோரிடமும் முடிகிறது
பார்த்து பார்த்து ரசிக்க
ரசித்து ரசித்து பார்க்க
மற்றவர்களை தவிர
உன்னிடம் தான்
எப்பவும் முடிகிறது!
உன்னிடம் பேச
ஆயிரம் இருக்கிறது
பேசிவிடத்தான்
இதயமும் துடிக்கிறது!
அதற்க்கு முன் உன்னிடம்
ஒரு கேள்வி
மறுக்காமல் பதில் சொல்
நான் உன்னிடம்
எப்படி பேசவேண்டும்
தோழனாகவா... காதலனாகவா...?
4 comments:
சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!
தோழனாக் பேசி அனுமதித்தால் , ஏற்றுக்கொண்டால் காதலனாக வாழுங்கள்.
அருமையான கவிதை ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
//பார்த்து பார்த்து ரசிக்க
ரசித்து ரசித்து பார்க்க//
மிக எளிமை மற்றும் மிக வளமை..
வாழ்த்துக்கள்...
Post a Comment