Sunday 29 November 2009

முத்தம் 9


எப்படி


Saturday 28 November 2009

டால்பின்களை கொன்று குவிக்கும் மனிதர்கள்


படத்தில் தண்ணீரில் கலந்திருக்கும் சிகப்பு நிறம் ஏதோ சூழ்நிலை மாற்றத்தினாலோ ரசாயன கழிவினாலையோ வந்தது என்று நினைத்து விடாதீர்கள். இவை டால்பின்களை கொன்று குவிப்பதால் வந்த ரத்தம்...






இந்த கொடுமை, கொடூரம் டென்மார்க்கின் பெரோஸ் தீவில் வருடா வருடம் தொடர்ந்து நடந்து வருகிறது... குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் இளைஞர்கள்... எதற்காக இளைஞர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பதை கேட்டு அதிர்ச்சியடையாதீர்கள்... அவர்கள் இளைஞரானதையும், வயதுக்கு வந்து விட்டதையும் உலகுக்கு உணர்த்தவே இந்த வீர பராக்கிரம நிகழ்ச்சி... இதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கிறது... கை கொட்டி உற்சாகப் படுத்துகிறது.





இதில் மனதை ஆசிட் விட்டு துளைக்கும் செய்தி என்னவென்றால் செத்து கொண்டிருக்கும் டால்பின்கள் உண்மையில் குதூகலமாய் கரைக்கு வருவதே மனிதர்களை கண்ட உற்ச்சாகத்தாலும் அவர்கள் கூட கொஞ்சி விளையாடவும் தான்... இப்படி நம்பி வருபவைகளை தான் கொன்று குவிக்கிறார்கள் இந்த அரக்கர்கள்... அதுவும் உடனே கொள்வதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொல்கிறார்கள்... அவைகள் இறக்கும் தருவாயில் குழந்தை போல் அழுவதை கூட ரசிக்கிறார்கள் என்றால் தெரிந்துகொள்ளுங்கள் இந்த குரூரத்தின் உச்சத்தை...


உலகம் முழுதும் மக்களை உற்ச்சாகப்படுத்தி கொண்டிருக்கும் டால்பின்களை கொன்று குவிக்க எப்படி இவர்களுக்கு மனசு வருகிறது என்பது தான் வேதனை... இதை நிறுத்த யார்  நடவடிக்கை எடுப்பது, அது உங்களுக்கு தெரிந்தால் இதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...


டால்பின்களை பற்றி சில செய்திகள்...
டால்பின்களை ஆறறிவு படைத்த உயிரினம் என்கிறது அறிவியல், காரணம் அவைகள் இரண்டு வயது குழந்தையின் அறிவுத் திறனோடு இருக்கிறது என்பதால் தான்... டால்பின்களுக்கு இரண்டு முளை உண்டு...அவை துங்கும் போது ஒரு முளை இயங்கவும் மறு முளை உறங்கவும் செய்கிறது, எனவே தான் அவை துங்கும் பொது கூட கண்கள் திறந்திருக்கும்... அதுவே மற்ற பிராணிகளிடத்தில் இருந்து இவைகளை தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது... டால்பின்கள் முச்சு விடுவது மனிதர்களை போல தன்னிச்சையாக நடப்பது இல்லை,...அதற்க்கு முயற்சி தேவைப்படுகிறது, இதற்காகவும் முளை எப்போதும் இயங்குவது அவசியமாகிறது. இவைகளின் சராசரி ஆயுட்காலம் 40 ௦ முதல் 50 வருடங்கள்...250 கிலோ இருக்கும் ஒரு டால்பின் தினமும் சுமார் 20 முதல் 30 கிலோ மீன்களை உணவாக உட்கொள்கிறது. டால்பின்கள் இயற்கையாகவே புத்திசலித்தனமும், அறிவும் படித்தவை, எனவே தான்  மனிதன் நினைத்ததை போல் அதை எளிதில் பழக்க முடிகிறது.

Thursday 26 November 2009

மக‌ன்


மீனவர்கள்


ரத்தம்


கல்லறை


Monday 23 November 2009

மகரந்த சேர்க்கை 1





சூர்யாவின் நுனி மூக்கின் மேல் வந்து  அமர்ந்தது  கோபம்...

"எனக்குப் பிடிக்கவில்லை..." என்றான் முகத்தை  திருப்பி கொண்டு

"எனக்கும் பிடிக்கவில்லை..." என்றாள் நிரஞ்சனா,  முன்னால்  விழுந்து முகத்தை மறைத்த முடியை  பின்னுக்கு தள்ளிய படி

"என்ன சொல்கிறாய்..."

"நீ இப்படியெல்லாம் பேசுவது எனக்கும் பிடிக்கவில்லை... அதுவும் சுத்தமாய்..."

"அப்படின்னா..."

"நீ மாற வேண்டும் சூரி... நிறைய மாற வேண்டும்..."

"முடியாது.. என்னால் முடியாது... நான் ஏன் மாற வேண்டும்... எதற்காகவும் யாருக்காகவும் நான் மாற வேண்டியதில்லை... மாறவும் மாட்டேன்..."

"உனக்காக நான் நிறைய மாறியிருக்கிறேன்...அது உனக்கு தெரியும் தானே..."

"இன்னும் மாற வேண்டும்..."

"ஆண் என்ற ஆணவத்தில் பேசுகிறாயா... உன்னை மாதிரி நானும் கோபப்பட்டால் விளைவு வேறு மாதிரியாயிருக்கும் சூரி..."

"மிரட்டி பார்க்கிறாயா..."

"எதார்த்தத்தை சொல்கிறேன்... இதில் மிரட்டலும் இல்லை அலட்டலும் இல்லை, வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும் சூரி..."

"யாருக்கு..."

"இரண்டு பேருக்கும் தான்..."

"இப்படி அசிங்கப்பட்டு நிற்ப்பதற்கு, அப்படியே போய் தொலையட்டும்... எனக்கொன்றும் கவலையில்லை..."

"என்ன அசிங்கம் நடந்தது..."

"அதை திருப்பி திருப்பி சொல்லச்சொல்கிறாயா..."

"திருப்பி திருப்பி சொல்லச் சொல்லவில்லை... உன்னை திருந்தச் சொல்கிறேன்..."

"அப்படின்னா  நான் தான் தப்பு செய்றேனா..."

"நீ தவறு செய்யவில்லை... முட்டாள் தனமாக  புரிந்திருக்கிறாய் என்கிறேன்..."

"என்னை முட்டாள் என்கிறாயா..."

"முட்டாள் என்று சொல்லவில்லை... பைத்தியம் என்கிறேன்... என் மேல் உனக்கு அளவுக்கு மீறிய பைத்தியம் என்கிறேன்... அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்... எனவே தான் இன்னும் எனக்கு உன்மேல் கோபம் வராமலிருக்கிறது..."

"உன் மேல் எனக்கு பைத்தியமெல்லாம் இல்லை... வெறுப்பு தான் கூடிக்கொண்டே போகிறது... உன்னால் தினமும் நான் வெறுப்பின் உச்சிக்கே போகிறேன்..."

"உண்மையாகவா... நான் வெறுத்துவிட்டேனா உனக்கு..."

"நான் சொன்னது வேறு, நீ சொல்வது..." பேசி முடிப்பதற்குள்

"'க்' கு வைத்து பேசாதே... நேரிடையாக சொல்... நான் வெறுத்து விட்டேனா... இல்லையா..." என்று இடைமறித்தாள்.
"அமாம்... வெறுத்துவிட்டாய்... சொல்லிவிட்டேன்.. என்ன செய்ய போகிறாய் இப்போது..." என்றான் சட்டென்று.

"நல்லா யோசித்து தான் பேசுகிறாயா சூரி..."

"ஒரு வாரமாக துங்காமல் கொள்ளாமல் யோசித்தாயிற்று..."

"துங்காமல் எடுக்கும் முடிவு தவறாக இருக்கலாம்... கொஞ்சம் தூங்கிவிட்டு யோசிக்கிறாயா..."

"தேவையில்லை... உன் அறிவுரை ஏதும் தேவையில்லலை... எது சரி என்று எனக்கு தெரியும்...நன்றாக யோசித்தாயிற்று..."

"நீ ஏதோ முடிவு செய்துவிட்டு பேசுவது போல் தெரிகிறது...."

"அப்படியே வைத்துக்கொள்..."

"அப்படி என்றால்  நேரடியாக விஷயத்தை சொல்லிவிடு..."

"அதான் கோபப்படுவேன் என்றாயே... நீ கோபப்படு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..."

நிரஞ்சனா யோசித்தாள். நிதானமாக யோசித்தாள். ஒருமுறை சூரியை ஏறிட்டு பார்த்தாள். அவன் முகம் கடுகடுவென இருந்தது. அவனுக்கு இவளை பார்க்க பிடிக்கவில்லை, பேச பிடிக்கவில்லை என்று இவளுக்கு தோன்றியது. இதற்க்கு மேல் பேசினால் அலட்சியப் படுத்துகிறவன் அடுத்து  அசிங்கப் படுத்துவான் போல் தெரிந்தது.

"இதற்க்கு மேல் உன்னிடம் பேசுவது வேஸ்ட்..."  அவன் முகத்துக்கு  முன்  சென்று சொன்னாள்

"சுத்த வேஸ்ட்... வருகிறேன் சூரி... நான் போய் வருகிறேன்... குட்பை... எல்லாத்துக்கும் குட்பை..."   கூறி விட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த  இடத்தை  விட்டு  விடு விடுவென நடந்தாள் நிரஞ்சனா.

                                                                  (தொடரும்...)

Sunday 22 November 2009

முத்தம் 8


Friday 20 November 2009

தெய்வம்

உருகி போகிறோம்...

இருக்கமாய்...

Sunday 15 November 2009

ஏக்கம்

Saturday 14 November 2009

முத்தம் 7




Thursday 12 November 2009

மழையளவு மனசு...


யோசிப்பு


Monday 9 November 2009

முத்தம் 6


முத்தம் 5


முத்தம் 4



முத்தம் 3





முத்தம் 2


முத்தம் 1


Wednesday 4 November 2009

வண்ணம்


Monday 2 November 2009

சைவமா... அசைவமா...