நீயா நானா கோபிநாத் சாதாரண நிலையிலிருந்து முன்னேறி இன்று உலகம் முழுதும் தெரியும் பிரபலம். சிறந்த நிகழ்ச்சி நடத்துநராக நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார், இவர் எழுதிய 'ப்ளிஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' புத்தகம் 50000 பிரதிகளை தாண்டி விற்பனையில் சக்கைப்பொடு போடுகிறது... இவர் நீயா நானா நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடித்தி வருகிறார் என்றாலும் தற்போது தலைப்புகளுக்கு பஞ்சமோ என்னவோ தெரியவில்லை மட்டமான தலைப்புகளோடு விவாதங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது... சாம்பிலுக்கு, 'அழகு மிகுந்தவரகள் தென்னிந்தியப் பெண்களா, வட இந்தியப் பெண்களா...', 'அண்ணிகளுக்குப் பிரச்சினை வருவது நாத்தனாராலா அல்லது கொழுந்தனாராலா...' என்பன. (சீக்கிரம் 'வெளக்கமாறு வீட்டை பெருக்கவா இல்லை புருசனை அடிக்கவா!' என்பது போன்ற தலைப்புகளை எதிர் பார்க்கலாம்... புருசனை அடிக்கத் தான் அணியில் இருப்பவர்களின் வீட்டு விளக்கமாறும், நாமும் தான் பதிதாபத்துக் குரியவர்கள்...) இந்த நிகழ்ச்சிக்கு சத்தமில்லாமல் ஒரு சர்ச்சை கிழம்பியிருக்கிறது... நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்பது தான் அது... குற்றம், நடந்தது என்ன... ஆப்டர் த ப்ரேக்... பவித்ரா... ஐயோ என் பொண்ணு...' என்று நான் போகமுடியாது என்பதால், விசயம் இதுதான்...
சமீபத்தில் அவர் விவாதிக்க எடுத்துக்கொண்ட தலைப்புகளில் ஒன்று, 'பெண்கள் தாலி அணிவது அவசியமா' என்பது. இது போல பல தலைப்புகளை சுட்டிக்காட்டி, இது போல் மற்ற மதங்களில் உள்ள சடங்குகளை, சம்பிரதாயங்களை ஏன் இவர்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்வதில்லை என்பது போன்ற பல விசயங்களை பேசி ஒரு சாரார் கூச்சலிட்டு, கொதித்தெழுந்தாலும், இதை மத சாயம் பூசி பெரிசு படுத்துவதோ, மற்ற மதங்களை வம்புக்கு இழுப்பதோ தேவையில்லாத ஆணி... மாட்டு கால் முறிந்ததுன்னு மானோட காலை ஒடைக்கிறது மாதிரி முட்டாள் தனமானது... ஆனால் இந்த தாலி தலைப்பில் அவர்கள் விவாததை பார்க்கும் போது சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி(இந்த பதத்திற்கு என்ன விளக்கம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!) என்பது போல் தான் இருக்கிறது.
நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், 'மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் தாலியை கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?' என்று கேடக 'கழற்றி விட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்' என்று கூறிய பெண்மணியிடம் 'மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?' என்று கேவலமாக ஒரு கேள்வியை கேட்டு அவரை அவமானம் செய்திருக்கிறார்... மிஸ்டர் கோபிநாத், நன்றாக விசயம் தெரிந்தவர் நீங்கள்... நடுநிலையாளராக நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு அவர்களின் சொந்த கருத்துக்களை திணிப்பதற்கு இங்கு இடமே இல்லை... நிகழ்ச்சிக்கு வருபவர்கள் உங்களை நடுனிலையாளர் என்று நினைத்து தான் வருகிறார்கள், ஆனால் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்க்கிறேன், தாங்களுக்கு ஒத்துபோகிற முடிவுக்கு பேசுபவர்களை தாங்கள் ஊக்கப்படுத்துவதும், எதிரணியினரை கேலி பேசுவதும், கிண்டல் செய்வதும் உங்கள் நடவடிக்கையாகத் தானிருக்கிறது...
இந்த விவாதத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது... ஒரு சாராருக்கு நீங்கள் சாதகமாக இருக்கிறீர்கள் என்பதை மறைக்க முடியாமல் ஒரு வேகத்தில், கோபத்தில் உங்களின் மனதில் உள்ளதை கொட்டிவிட்டீர்கள்... இப்படி நீங்கள் அந்த பெண்மணியிடம் கேட்ட கேள்வியில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது... இதை பார்த்துக் கொண்டிருந்திருக்கும் அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள்... அதெல்லாம் பற்றி கவலையில்லாமல் ஒரு சாரரை திருப்திப் படுத்த, சிரிக்க வைக்க நீங்கள் வாயில் வந்ததையெல்லாம் பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்... நீங்கள் கூப்பிட்டு, டிவியில் முகம் தெரியுமே என்று பேச வந்து விட்டார்கள் என்பதற்காக, நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு வரவேண்டுமா என்று நினைக்காதீர்கள்!
தாலி தேவையில்லை என்கிற அணியில் பேசியவர்களின் கருத்துக்கள் சில:
* தாலி அணிவது வெறும் மூட நம்பிக்கையே. தெய்வீகமோ, புனிததன்மையோ அதில் இல்லை.
* வேலைக்குப் போகும் பெண்கள் தாலியை மறைத்து வைத்து கொள்கிறார்கள் அல்லது வீட்டிலேயே விட்டு விட்டு போய்விடுகிறார்கள்.
* பல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.
* சில பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியை கழற்றி வைத்து விடுகிறார்கள்.
* தாலி என்பது நாய்களின் உரிமம் போன்றது. நாயின் கழுத்தில் தொங்குவது போல பெண்களின் கழுத்தில் அது தொங்குகிறது, அவ்வளவு தான்.
இந்த அணியில் பல பெண்கள் தாலியை கழற்ற தயாராக இருக்க, ஒரு 65 வது பெண்மணியை நோக்கி 'இப்போதே, இங்கேயே தாலியை கழற்றுவீர்களா?' என்று கோபிநாத் கேட்டவுடனேயே தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்திருக்கிறார் அந்த பெண்மணி. நிகழ்ச்சியின் இறுதியில் அவருக்கு 'சிறந்த பங்கேற்பாளர்' என்ற பரிசு வழங்கி கெளரவித்தார்களாம். அப்போது அந்த பெண்ணின் தைரியத்தையும், பகுத்தறிவையும் பாரட்டி கையொலி எழுப்புமாறு வற்பறுத்தியுள்ளார் கோபிநாத். இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், தாலி தேவையில்லை என்று பேசியவர்கள் ஏன் தாலியை அணிந்து கொண்டு வந்தார்கள் அல்லது இன்னும் ஏன் அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான். தேவையில்லை என்று ஆன பிறகு துக்கிப் போட்டு விட்டு போக வேன்டியது தானே... தற்காலத்தில் எந்த ஆணும் தாலியை போட்டுக் கொள்ளவேண்டும் என்று மனைவியை கட்டாயம் செய்வதாக தெரியவில்லை... அலுவலகத்துக்கு போகும் பெண்கள் தாலியை மறைப்பது தாலிக்காக இல்லை தனக்கு திருமணமானதை யாருக்கும் காட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக... எங்களுடைய அலுவலகத்தில் கூட சில திருமணமான ஆண்கள் தாங்களை திருமணம் ஆகாதவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்... இதற்கு என்ன அர்த்தம் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்!
தாலியை நாய் உரிமத்துக்கு சமமாக பேசி கொச்சைப்படுத்தி மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்... தாலி என்பது அடிமைத் தனத்தை குறிக்கும் ஒரு கருவியாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்... நிறைய பெண்கள் தழைய தழைய தாலிப் போட்டுக் கொண்டு கணவரை தன் நுனி விரலில் ஆட்டு வைப்பதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்... பெரியார் வழியில் வந்த நம் முதல்வர் அவர்களின் மனைவியாரும், துணைவியாரும் தாலி போட்டிருக் கிறார்களே அப்படி என்றால் அவர்கள் அடிமைகளா, இல்லை முதல்வர் தான் மூட நம்பிக்கையில் இருக்கிறாரா... பெரியாரின் வழி வந்தவர்கள் சீர்திருத்த திருமணங்களுக்கு தலைமை தாங்குகிறார்களே, அப்போது அவர்கள் கையால் மணமக்களிடம் எடுத்து கொடுப்பது தாலியைத் தானே... அது மூட நம்பிக்கை என்றால் அதை ஏன் அவர்கள் இன்னும் கடை பிடிக்கிறார்கள்... அவ்வளவு ஏன், கோபிநாத் அவர்கள், அவரது அம்மாவிடம் தாலியை அறுத்து தூக்கி தூர எறியச் சொல்வாரா... அவரின் அம்மா தான் அதை செய்து விடுவாரா!
கடவுள் நேரில் வந்ததில்லை... நாம் பார்த்ததும் இல்லை... கேட்ட வரங்களை அவர் கொடுக்கிறாரா என்றும் தெரியாது... பின் இது மூட நம்பிக்கை தானே... பேசாமல் கோவில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும் இடித்து விடலாமா... அடுத்த தலைப்பாக இதை எடுத்து விவாதிக்க முடியுமா உங்களால்... தாலி என்பது நம்பிக்கை... அது மூட நம்பிக்கையோ, அடிமைத்தன்மோ இல்லை... அணிந்து கொள்வதோ, கூடாததோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது... இங்கு யாரும், யாரையும் கட்டாயப் படுத்தவில்லை... இதை பற்றிப் அவதூராக பேசி காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையை தகர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது... பெண் விடுதலையும், முன்னேற்றமும் அவளின் துணிச்சலிலும், தன்னம்பிக்கையிலும், முயற்சியிலும் தான் இருக்கிறது... அதை தாலி தடுத்துவிடும் என்பது சரியா என்ன... எந்த மதமாக இருந்தாலும், நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ மத சம்பந்தப் படுத்தப்பட்ட நிகழ்வுகள், சடங்குகள் காலம் காலமாக நம்பிக்கையை சேர்த்து வைத்திருக்கிறது என்றால் அதை அசிங்கமாக பேசுவதையும், கேலியாக சித்தரிப்பதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! இது எப்படி தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை எழுதும் உங்களுக்கு தெரியாமல் போனது என்பதுதான் விந்தை... படிக்கும் நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...
15 comments:
விவாதத்தை பற்றிய சரியான விவாதம் நண்பரே, நான் இலங்கை தமிழன் என்றாலும் இந்நிகழ்ச்சினை சற்று அவதானிப்பவன் என்ற வகையில் இங்கு விவாதிக்கப்படுகின்ற விடயங்களில் குறிப்பாக நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் நிகழ்வினையும் நான் பார்திருக்கின்றேன் இந்துமத சம்பிர்தாயங்களை சற்று கிண்டல் பண்ணும் விடயமாகவே நான் அவதானித்தேன், ஏன் இவர்களால் கிறிஸ்த்தவ மதத்தினர் சுவரைப்பார்த்து கூச்சலிடுகின்ற சம்பிர்தாயங்களை பற்றி விவாதிக்க முடிவதில்லை. நிகழ்ச்சிகள் எந்த மதக் கொள்கையினையும் சாராது நடத்த வேண்டும் என்பது எனது கருத்து.
விவாதத்தை பற்றிய சரியான விவாதம் நண்பரே, நான் இலங்கை தமிழன் என்றாலும் இந்நிகழ்ச்சினை சற்று அவதானிப்பவன் என்ற வகையில் இங்கு விவாதிக்கப்படுகின்ற விடயங்களில் குறிப்பாக நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் நிகழ்வினையும் நான் பார்திருக்கின்றேன் இந்துமத சம்பிர்தாயங்களை சற்று கிண்டல் பண்ணும் விடயமாகவே நான் அவதானித்தேன், ஏன் இவர்களால் கிறிஸ்த்தவ மதத்தினர் சுவரைப்பார்த்து கூச்சலிடுகின்ற சம்பிர்தாயங்களை பற்றி விவாதிக்க முடிவதில்லை. நிகழ்ச்சிகள் எந்த மதக் கொள்கையினையும் சாராது நடத்த வேண்டும் என்பது எனது கருத்து.
விவாதத்தை பற்றிய சரியான விவாதம் நண்பரே, நான் இலங்கை தமிழன் என்றாலும் இந்நிகழ்ச்சினை சற்று அவதானிப்பவன் என்ற வகையில் இங்கு விவாதிக்கப்படுகின்ற விடயங்களில் குறிப்பாக நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் நிகழ்வினையும் நான் பார்திருக்கின்றேன் இந்துமத சம்பிர்தாயங்களை சற்று கிண்டல் பண்ணும் விடயமாகவே நான் அவதானித்தேன், ஏன் இவர்களால் கிறிஸ்த்தவ மதத்தினர் சுவரைப்பார்த்து கூச்சலிடுகின்ற சம்பிர்தாயங்களை பற்றி விவாதிக்க முடிவதில்லை. நிகழ்ச்சிகள் எந்த மதக் கொள்கையினையும் சாராது நடத்த வேண்டும் என்பது எனது கருத்து.
திரு ரத்தினசபாபதி சார்
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சார்.விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சில் இந்துமத நம்பிக்கைகளை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர்.கீழ்காணும் சுட்டியைப் படிக்கவும்.
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/
உங்களின் வாதம் சரியே. அவருக்கென்ன நிகழ்ச்சி முடிந்ததும் பணம்.
very gud article.
regards
www.hayyram.blogspot.com
No difference between YOU & IDIOTIC Tamil Cinema Directors...
Mr Gopi natha intha blog patha , cherupala adichathu mathuri irrukum . Neenga sonna karuthukal arumai , kuripa sonna 1. program vanthavarkal yen thali aninthu vantharkal 2. Koyilkalai idipathu patriya vivatham , 3 avunga amma vidam intha kelviya ketpara ?
Good article
அவருக்கு உரிய தகுதிக்கு அவர் உரியவர் இல்லை. நீங்க ரொம்ப லேட்டாக பீல் பண்ணுறீங்க.
Very good article.
Visit 10 websites and earn 5$. Click here to see the Proof
Burj Dubai opening ceremony Photo Gallery
"Burj" is Arabic for "Tower" World Wonder Burj Dubai Photo Gallery
சபா அவர்கள
கோபிநாத் கேள்வி கேட்பதறுக்கு முன்னால் அவரது மனைவியிடம் அல்லது
அவருடுய உறவினர்களிடம் இத்தகைய கேளிவிகளை கேட்டால் நன்றாக இருக்கும்
பதிவும் பின்னூட்டங்களும் செம காமெடியா இருக்கே.
தாலி என்பது மதம் சம்பந்தமானது அல்ல, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தியாவில் பெரும்பாலான கிறிஸ்தவ பெண்கள் , திருமணமானவுடன் தாலி அணிந்து கொள்கிறார்கள். எனவே கிறிஸ்தவர்களை பார்த்து கேள்வி கேட்கவில்லையே என்று புலம்புவது தவறு. தாலி என்பது ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கான அடையாளம் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
Post a Comment