Thursday, 10 December 2009

மானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா!


மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடுறவங்கள பாராட்டாம போனா அது பச்ச‌ பாம்புக்கு பாய்சன் வச்ச மாதிரி... ஏன்னா ஒவ்வொருத்தரும் பிரமாதமா ஆடுறாங்க... அட்டகாசமா உடை உடுத்துறாங்க... ரொம்ப மெனக்கெடுறாங்க... ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்ட் எடுத்துகிட்டு  ரிஸ்க் எடுத்து ஆடுறாங்க... கான்செப்ட்டுக்கு ஏத்த மாதிரி மேடையும் அற்புதமா இருக்கு... இவர்களை ஆட்டிவைக்கிற நடன இயக்குனர்களை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்... இந்த அளவுக்கு இவர்கள் தான் புது புது விசயங்களை புதுசு புதுசா தந்து அசத்துறாங்க.. இவர்கள் மேன்மேலும் வளர வேண்டும்... வாழ்த்துக்கள்!

நான் சொல்ல வந்த விசயம் இதைவிட முக்கியமானது... அது இங்கு அலப்பறையை கொடுத்துக் கொண்டிருக்கும் நடுவர்கள் பற்றியது தான்... தும்பிக்கையில்லாத யானை கணக்கா மூன்று பேரும் நீதிபதி சீட்டுல வந்து உட்காந்தவுடனேயே ஆடிகாத்துல அரளிப்பூ கொட்டுற மாதிரி அரங்கமே ஒரே அல்லு தான்... நடனமாட வர்றவங்ககிட்ட இவங்க கேக்குற கேள்விய அணுசக்தி விஞ்ஞானி அப்துல்கலாம் கூட கேட்க முடியாது... ஆடுறவங்க எடுத்துக்கறது நாலு நிமிசம்னா அத அக்கு வேற ஆணி வேறயா அலசி அராஞ்சி தீர்ப்பு சொல்ல போற மாண்புமிகு நீதிபதிகள் மூன்று பேரும் எடுத்துக்கறது நான்கு நிமிசத்துக்கு மேல... இவங்க வாய தொறக்குறத்துக்கு முந்தியே நாம வேற‌ சேனல் மத்திடனும்... இது தான் நாம தப்பிக்கிறத்துக்கு ஒரே வழி... இத தான் நிறைய பேர் செய்யறாங்க... இல்லைன்னா படுக்க வச்சி பச்ச மிளகாய தேச்ச மாதிரி உடம்பு முழுதும் எரியும்.


இதுல கற்புக்கரசி குஷ்பு தீர்ப்பு சொல்ற தோரனையப் பார்த்தா பச்ச குழந்தை கூட பார்த்தது போதும்னு படுக்க போயிடும் அப்பவே... ஆட்டத்த பத்தி இந்த ஆத்தா கொடுக்கற அறிவுரைய அறிவாலயத்துல கல்வெட்டா போடலாம்... அடுத்த தலைமுறையாவது படிச்சுட்டு பைத்தியமாகும்... இதுல அரசி சொல்ற தீர்ப்பு இருக்கே அது நாட்டாமையில அவங்க வீட்டுக்காரர் சொன்ன தீர்ப்ப மிஞ்சிடும் போங்க.

அடுத்து கலாக்கா இவங்க மனசுல என்னமோ நடனத்துக்கே இவங்க தான் கடவுள்னு நினைப்பு... ஆடுன ஆட்டத்தை பத்தி இஞ்சு பை இஞ்சா இவங்க கொடுக்கற வியக்கானம் இருக்கே... அத கேட்டுகிட்டு பேசாம‌ நிக்கிறத்துக்கு பதிலா ஆடுன‌வங்க ஆத்துல இற‌ங்கி அப்படியே போயிடலாம்... அட மக்கா இவங்க பேசுற பேச்சும், உச்சரிப்பும், பாவனையும் கடவுளே கண்ண கொடுத்துட்டு இந்த கண்றாவியெல்லாம் வேற பார்க்க வச்சுட்டியேன்னு கோபம் வரும் நமக்கு.

அப்புறம் நமீதா அம்மணி... இவுக அதிகமா துணி உடுத்துறதும் இல்லை, அதிகமா அலப்பறைய கொடுக்குறதும் இல்லைன்னாலும், இவுக பேசுற தமிழ் இருக்கே  அடடா, காதுல கனகாமர வாசம் வீசும்.

இவங்க மூனு பேர் மூடுக்கு என்னத்தோனுதோ அதுதான் தீர்ப்பு.. சில நேரம் திட்டுவாங்க.. சில நேரம் சிரிப்பாங்க.. சில நேரம் அழுவாங்க.. சில நேரம் குதிப்பாங்க.. சில நேரம் சிணுங்குவாங்க.. சில நேரம் துள்ளுவாங்க.. சில நேரம் முத்தம் கொடுப்பாங்க.. சில நேரம் கட்டிப்பிடிப்பாங்க.. இந்த மாதிரி கண்கொள்ளா காட்சியெல்லாம் பார்க்க காதுல இன்னும் ரெண்டு கண்ணு இருந்தா இன்னும் வசதியா இருக்கும் போங்க.

இவுங்க உடுத்துற உடையிருக்கே... போலீஸ் உடையில நமீதாவையும், தலையில கொம்பு வச்சுகிட்டு பேய் உடையில குஷ்புவையும், பள்ளிகூட உடையில கலாவையும் நாம‌ பார்த்து பார்த்து ரசிக்கலைன்னா நமக்கு பக்கவாதம் வந்துரும், பார்த்துக்கங்க‌ ஜாக்கிரதை.

கலைஞர் தொலைகாட்சியில் கொஞ்சம் பேராவது பார்க்குற‌ நிகழ்ச்சின்னா அது இது தான்... அதுலயும் நாளுக்கு நாள் இவங்க அட்டகாசம் அதிகமானா கஷ்டம் தான்... தொலைகாட்சி நிர்வாகம் தான் யோசிக்கனும் கட்டுற வரை தான் அது கைலி, கிழிஞ்சா புடித்துணிங்கறத!

4 comments:

Good citizen said...

என்னாத்த சொல்றது எல்லாம் நம்ம தலைவிதி ,,இத எல்லாம் பார்த்து தொலைக்கனும்னு எழுதியிருக்கு,,
கொடுமைடா சாமி்!!!!

மகா said...

//தும்பிக்கையில்லாத யானை கணக்கா மூன்று பேரும் நீதிபதி சீட்டுல வந்து உட்காந்தவுடனேயே ஆடிகாத்துல அரளிப்பூ கொட்டுற மாதிரி அரங்கமே ஒரே அல்லு தான்//

excellent comment..

hamaragana said...

ஐயோ சாமீ எப்போ இவங்க அலபராய நிப்பாட்டுவாங்க கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
ஏற்கெனவே அடிக்கடி வந்து வீல் சேர் ஆளுக பயங்காடுறாங்க இதுலே இவங்க வேற மூணு பேரா
வந்து நம்மள சாகடிக்கிறாங்க பாக்கிறதில்லே எசமான் ...... பாக்கிறதில்லே எசமான் ......

புலவன் புலிகேசி said...

//இதுல கற்புக்கரசி குஷ்பு தீர்ப்பு சொல்ற தோரனையப் பார்த்தா பச்ச குழந்தை கூட பார்த்தது போதும்னு படுக்க போயிடும் அப்பவே//

கற்புக்கரசி....ஹா ஹா ஹா..காப்பியடிச்ச மாராட்ட புரோகிராம்...