Saturday 28 November 2009

டால்பின்களை கொன்று குவிக்கும் மனிதர்கள்


படத்தில் தண்ணீரில் கலந்திருக்கும் சிகப்பு நிறம் ஏதோ சூழ்நிலை மாற்றத்தினாலோ ரசாயன கழிவினாலையோ வந்தது என்று நினைத்து விடாதீர்கள். இவை டால்பின்களை கொன்று குவிப்பதால் வந்த ரத்தம்...






இந்த கொடுமை, கொடூரம் டென்மார்க்கின் பெரோஸ் தீவில் வருடா வருடம் தொடர்ந்து நடந்து வருகிறது... குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் இளைஞர்கள்... எதற்காக இளைஞர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பதை கேட்டு அதிர்ச்சியடையாதீர்கள்... அவர்கள் இளைஞரானதையும், வயதுக்கு வந்து விட்டதையும் உலகுக்கு உணர்த்தவே இந்த வீர பராக்கிரம நிகழ்ச்சி... இதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கிறது... கை கொட்டி உற்சாகப் படுத்துகிறது.





இதில் மனதை ஆசிட் விட்டு துளைக்கும் செய்தி என்னவென்றால் செத்து கொண்டிருக்கும் டால்பின்கள் உண்மையில் குதூகலமாய் கரைக்கு வருவதே மனிதர்களை கண்ட உற்ச்சாகத்தாலும் அவர்கள் கூட கொஞ்சி விளையாடவும் தான்... இப்படி நம்பி வருபவைகளை தான் கொன்று குவிக்கிறார்கள் இந்த அரக்கர்கள்... அதுவும் உடனே கொள்வதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொல்கிறார்கள்... அவைகள் இறக்கும் தருவாயில் குழந்தை போல் அழுவதை கூட ரசிக்கிறார்கள் என்றால் தெரிந்துகொள்ளுங்கள் இந்த குரூரத்தின் உச்சத்தை...


உலகம் முழுதும் மக்களை உற்ச்சாகப்படுத்தி கொண்டிருக்கும் டால்பின்களை கொன்று குவிக்க எப்படி இவர்களுக்கு மனசு வருகிறது என்பது தான் வேதனை... இதை நிறுத்த யார்  நடவடிக்கை எடுப்பது, அது உங்களுக்கு தெரிந்தால் இதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...


டால்பின்களை பற்றி சில செய்திகள்...
டால்பின்களை ஆறறிவு படைத்த உயிரினம் என்கிறது அறிவியல், காரணம் அவைகள் இரண்டு வயது குழந்தையின் அறிவுத் திறனோடு இருக்கிறது என்பதால் தான்... டால்பின்களுக்கு இரண்டு முளை உண்டு...அவை துங்கும் போது ஒரு முளை இயங்கவும் மறு முளை உறங்கவும் செய்கிறது, எனவே தான் அவை துங்கும் பொது கூட கண்கள் திறந்திருக்கும்... அதுவே மற்ற பிராணிகளிடத்தில் இருந்து இவைகளை தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது... டால்பின்கள் முச்சு விடுவது மனிதர்களை போல தன்னிச்சையாக நடப்பது இல்லை,...அதற்க்கு முயற்சி தேவைப்படுகிறது, இதற்காகவும் முளை எப்போதும் இயங்குவது அவசியமாகிறது. இவைகளின் சராசரி ஆயுட்காலம் 40 ௦ முதல் 50 வருடங்கள்...250 கிலோ இருக்கும் ஒரு டால்பின் தினமும் சுமார் 20 முதல் 30 கிலோ மீன்களை உணவாக உட்கொள்கிறது. டால்பின்கள் இயற்கையாகவே புத்திசலித்தனமும், அறிவும் படித்தவை, எனவே தான்  மனிதன் நினைத்ததை போல் அதை எளிதில் பழக்க முடிகிறது.

4 comments:

எட்வின் said...

மின்னஞ்சலில் பார்க்க நேரிட்டது... நிச்சயமாகவே பரிதாபத்திற்குரிய விஷயம் தான்.

நம்மூர்ல கோழிய கொல்றான் அங்க இப்பிடி எதயாவது கொல்றான்.So No BIG DEAL... அப்பிடின்னு நான் நெனக்கிறேன்

ரெத்தினசபாபதி said...

நீங்கள் சொல்வது சரிதான் எட்வின், என்றாலும் கோழிகள் கொல்வதற்க்காகவே வளர்க்கப்படுகின்றன... டால்பின்கள் உலகில் மிச்சம் இருப்பதே கொஞ்சம் தானே... அதுவும் கோழிகளை டால்பின்களோடு ஒப்பிடவும் முடியவில்லை என்னால்...

நிகழ்காலத்தில்... said...

மனிதன் இயற்கைக்கு செய்யும் துரோகம்.,

என்ன செய்ய..

இதன் பலனை மனித இனம் நிச்சயம் அனுபவிக்கும்:(

வாழ்த்துகள் நண்பரே

பின்னோக்கி said...

கொடுமை. அழிந்து கொண்டிருக்கும் உயிரினத்தைக் காப்பாற்ற வேண்டும்.