Thursday, 11 February 2010

நடந்தது என்ன - இரண்டாம் பாகம்!


கிராமத்தில் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டரிலேயே இருக்கிறது எங்களுடைய  வயல்... அங்கே பம்ப்செட் உள்ளது... அதை சுற்றி தென்னை மரங்களும், மாமரமும் நிறைந்த இடம்... நடுவே கீற்றுக் கொட்டகை...சுற்றிலும் வயல் வெளி... தண்ணீர் ஊற்றும் இடத்தில் பெரிய தொட்டி... ரம்மியமான சூழல்... கிறங்கடிக்கும் காற்று... கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை... அது ஒரு சொர்க்கம்... உச்சிவெயில் வேலைகளில் அங்கு சென்று தண்ணீர் தொட்டியில் விழுந்து புரள்வது வழக்கம்... நேரம் காலம் தெரியாமல் தண்ணீரில் மிதப்பதும், தத்தளிப்பதும் (துண்டு கட்டிக்கொண்டு தானே என்று கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது) சுகமான அனுபவம்... அப்படி  நினைத்து தான் உச்சி வெயில் வேளையில் அங்கு தனியாக வந்து விட்டேன்... அப்போது தாலாட்டாக வீசிய தென்றலில் மயங்கி, சிறிது நேரம மோட்டார் கொட்டகையில் கிடந்த கட்டிலில் படுத்தேன்... (கட்டிலில் படுப்பதும் ஒரு சுகம் தான்... நம்மை அப்படியே உள் வாங்கிகொண்டு அனைத்த‌படியே... அடடா...).

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை, அந்த சம்பவம் நடந்த போது தான் முழிப்பு வந்தது... உறக்கம் லேசாக கலைகிறது... யாரோ உள்ளே நுழைவது போல் ஒரு உணர்வு...அடுத்த சில வினாடிகளில் என் உடம்பை ஏதோ ஒரு சக்தி அமுக்குகிறது...எனக்கு நன்றாக நினைவு வந்து விட்டது... கண்களை திறந்து பார்க்கிறேன்... திரக்க முடியவில்லை... முகத்தை திருப்பப் பார்க்கிறேன்... முடியவில்லை... உடம்பின் மேல் மேலும் பாரம் அதிகமாகிறது... என்க்கு கைகளை அசைக்க முடியவில்லை... கால்களை அசைக்க முடியவில்லை... சத்தம் போடலாமா என்று முயற்ச்சித்துப் பார்க்கிறேன்... ம்ம்ம்... அதுவும் முடியவில்லை... என் உடம்பு என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது... ஆனால் உணர்வு இருக்கிறது... நினைவு இருக்கிறது... நடப்பது தெரிகிறது, ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை...  இத்தோடு நம் கதை முடிந்தது என்று தான் நினைத்திருந்தேன்... ஆனால் சரியாக 2 அல்லது 3 நிமிடங்களுக்குள் 'சலேர்' என ஏதோ விடுபடுகிறது... உடம்பு அசைவுக்கு வருகிறது... முகத்தை திருப்ப முடிகிறது.

உடனே எழுந்து உட்கார்ந்தேன்... உடம்பு முழுதும் வியர்வை ஆறாக ஓடுகிறது... மனது தடதடக்கிறது... உடம்பில் சிறு உதறல்... அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்க வில்லை நான்... எழுந்து கொட்டகையை விட்டு வெளியே வந்து, ஓட்டமும், நடையுமாக திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன்... வந்த பிறகுதான் தெரிந்தது நான் எவ்வளவு வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது... என் முகத்தைப் பார்த்தவர்கள் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள்... நடந்ததை சொன்னேன்... அதற்கு முன் அங்கு நிலவிய ஒரு நம்பிக்கையை சொல்லியாக வேண்டும்.


எங்கள் வீட்டுக்கு எதிரே வயலுக்கு பக்கத்தில் மூங்கில் குத்துக்கள் நிறைந்த காடு போன்ற பகுதி இருக்கிறது... அதற்குள்ளே இருந்த ஒரு பூவரசு மரத்தில் அதற்கு சில வருடங்களுக்கு முன் ஒரு கன்னிப்பெண் தூக்குமாட்டி இறந்து போனாள்... அதன் பிறகு இரவு நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்கிறவர்கள் பல சம்பவங்களை கூறுவார்கள்... அதில் சில... இரவு நேரத்தில் வரப்புகளில் நடந்து செல்லும் போது, கொஞ்சம் முன்னால் யாரோ நடந்து போவது போல் தெரியுமாம்... கூப்பிட்டுப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்களாம்... சில வேளைகளில் வாய்க்கால் முழுவதும் மண்டிகிடக்கும் கோரைகள் விலக விலக யாரோ நடந்து செல்வது மாதிரி தெரியுமாம்... அதை விட நான் கண்கூடாகப் பார்த்தது, இரவு நேரங்களில் நாய்களும் வயலுக்கு வருவதுண்டு... அப்படி ஒருநாள் பின்னால் வந்த கொண்டிருந்த‌ நாய் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த உடன் வேகமாக குறைத்துக் கொண்டு முன்னால் பாய்ந்து சென்றது... யாரோ முன்னால் செல்வது போலவும், அவர்களை துரத்துவது போலவும் இருந்தது அந்த செயல்... பின் திடீரென யாரோ துரத்துவது போல பயந்து போய் பின்னால் வருகிறது... மீண்டும் குறைத்துக்கொண்டு முன்னால் செல்வதும், பின்னால் வருவதுமாக ஒரு குறிப்பிட்ட தூரம் வரை துரத்தி சென்று விட்டு விட்டு தான் திரும்பியது... நிச்சியமாக அங்கு யாரும் இல்லை என்பது எவரெடி டார்ச் லைட்டில் நன்றாக தெரிகிறது... யோசித்துப்பாருங்கள்... அந்த நேரத்தில் மனுசனின் மன நிலையை.

ஊரில் இப்போது எல்லோரும் தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள்... அதாவது என்ககு நடந்ததற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது போல்... (இதை எழுதி விட்டு இன்று இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்பது தான் மனதுக்குள் இருக்கும் கவலை... இப்பொது நேரம் இரவு 11 மணி) அன்றிலிருந்து பம்புசெட்டுக்கு செல்வதை அடியோடு ஒழித்தேன்... குளிப்பதாவது மண்ணாவது, ஆளில்லாமல் அந்த இடத்தை அண்ணாந்து கூட பார்ப்பதில்லை... (இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை கிராமத்தில் வாழும் மனிதர்கள்...). அடுத்த சில வருடங்களில் நான் சென்னை வந்து விட்டேன்.. திருவல்லிக்கேணியில் தனி அறை எடுத்து த்ங்கியிருந்தேன்... அங்கேயும் ஒருநாள் அதே போல் மீண்டும் அந்த சம்பவம் நடந்தது... (கிராமத்தில் இருந்த பெண் எப்படி இங்கு வந்திருப்பாள்...) இந்த முறை என்னால் இன்னும் தெளிவாக உணர முடிந்தது... நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்க்கு காற்றைப்போல் யாரோ உள்ளே நுழைவது போனறு தெரிகிறது... உணர முடிகிறது... பிறகு முன்னால் சொன்னது அப்படியே நடக்கிறது... இந்த முறை இஷ்ட தெய்வமான அனுமாரை வேண்டி கொள்வதைத் தவிர வேரெதுவும் செய்ய முடியவில்லை. 

அதன் பிறகு நான் மடிப்பாக்கத்துக்கு குடி வந்த பிறகும் மீண்டும் ஒருமுறை அதே நடந்தது... இப்போதெல்லாம் என்னதான் நடக்கிறது என்று உற்று கவனிக்க முயல்கிறேன்... ஆனால் முடியவில்லை... ஏதோ நடக்கிறது ஆனால் என்ன நடக்கிறது என்பது மட்டும் தெரியவில்லை... (இன்று இரவு தனி அறையில் படுக்கமுடியாது என்பது தெளிவானதால் ஹாலிலேயே அம்மாவுக்கு அருகில் படுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்... உங்களுக்கு ஒன்றும் பயம் இல்லையே...) இது ஏதோ கற்பனை இல்லை... உண்மையில் நடந்த்து... இதேபோல் உங்களுக்கும் நடந்திருந்தால் சொல்லுங்கள் ஒரு சங்கம் அமைத்து போராடலாம். இதே வரிசையில் என்னை புரட்டிப்போட்ட மற்றொரு சம்பவம் என் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் நடந்தது... அந்த திகில் பற்றி அடுத்த கட்டுரையில்...

5 comments:

Bala said...

இதே போன்று எனக்கும் பலமுறை (நினைவு தெரிந்த முதல்) நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் பயந்த நான் பின் அது பழக்கமாகிவிட்டது. இந்த நிகழ்வை அறிவியல் பூர்வமாகவே அணுகுங்கள். வீணாக நீங்கள் பயந்தது மட்டும் இன்றி எல்லோரையும் பயமுறுத்த வேண்டாம். எனக்கு தெரிந்து இது அக்சிஜென் குறைவான பகுதியில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது . (எ. கா) இரவு நேரத்தில் மரங்களின் மிக அருகில் அல்லது காற்று புகும் வசதி அற்ற முடிய அறைகளில் அதிகம்.

jothi said...

எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அம்மாவிடம் கேட்டதிற்கு அதன் பெயர் அமுக்கான் (???) என்று சொன்னார்கள். அதன் பின் இரண்டு முறை எனக்கு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே நண்பர் சொன்னதுபோல் காற்று புகாத அறையில் நிகழ்ந்தவை. இதற்கு கண்டிப்பாக அறிவியல் ரீதியான காரணம் இருக்கும்.

Anonymous said...

there is a time gap between body and brain system synchornaisation

Anonymous said...

This is called as sleep paralysis. Nothing to worry.

http://en.wikipedia.org/wiki/Sleep_paralysis#Symptoms_and_characteristics

Anonymous said...

This is called as sleep paralysis. Nothing to worry.

http://en.wikipedia.org/wiki/Sleep_paralysis#Symptoms_and_characteristics