Monday, 5 October 2009

வாங்க கலாய்க்கலாம்...

இவர்களிடம் அதிரி புதிரி அய்யாவு கேட்க‌ நினைத்தது...
ஜெயலலிதாவிடம்: போயஸ் தோட்டத்தில் இப்போ இலையுதிற்க் காலமாமே...
ராமதாஸிடம்: அடுத்தது எங்கன்னு முடிவு பண்ணியாச்சா...
கருணாநிதியிடம்: உங்கள புகழ்றத்துக்கு யாரு தேதி கேட்டாலும் உடனே கொடுக்கறீங்கலாமே... எனக்கும் ஒரு தேதி கொடுங்களேன்...
தமிழக திரைப்பட விருது கமிட்டியிடம்: உளியின் ஓசைக்கு மூணு விருதாமே... என்ன கொடுமை சார் இதெல்லாம்...
கவிஞர் வாலியிடம்: கலைஞரை புகழ்றதையே ஒரு வேலையா வச்சிருக்கீங்க போல...
கவிஞர் விஜயிடம்: ஞாபகங்கள்ன்னு ஒரு படம் எடுத்தீங்கள அது உங்க ஞாபகங்கத்துல இருக்கா...
அறந்தாங்கி திருநாவுக்கரசிடம்: உங்க புயல் காங்கிரஸ் பக்கமா கரையேரப்போவதா சொல்றாங்க... பாவம் காங்கிரஸ்...
நடிகர் கார்த்திகிடம்: காணாம‌ப்போன கட்சியை விடுங்க... உங்க‌ கண்ணாடி தொப்பியையாவது கண்டுபிடுச்சீங்களா...
வைக்கோவிடம்: அடுத்த கட்சிக்கு ஆள் அனுப்புறத நிறுத்திட்டீங்களா இல்லையா...
சரத்குமாரிடம்: ஜக்குபாய் கேசட் வெளியிட கலைஞரை கூப்பிட்டு கூல் பண்ணிட்டீங்க‌...சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டீங்கல... அதாங்க உங்க கட்சி... அதுக்கு அடுத்து மூடுவிழாவா...
அத்வானியிடம்: மீண்டும் ராமர் கோவில் கட்டுவேன்... கட்சியவிட்டு விலகுவேன்னு... கைப்புல்ல கணக்கா ஒரே காமெடிதான் போங்க...
பன்னீர்செல்வத்திடம்: நெருப்பில்லாம புகையாதுங்கறாங்க.. உண்மையா...
திருமாவளவனிடம்: சோனியாகாந்திய சந்திச்சா இலங்கையைப்பத்தி மூச்சு விடறது இல்ல போலிருக்கு... பதவி கொடுத்தவங்களாச்சே... பார்த்து பக்குவமா நடந்துக்கஙக...
காந்தியிடம்: உங்க பிறந்தநாளும் அதுவுமா ஒரு எட்டு வந்து உங்க தேசத்த பார்த்துட்டு போகக்கூடாதா, அது இப்ப‌ என்ன கதியா இருக்குன்னு!
நடிகர் விஜயிடம்: ஒரு தட‌வை முடிவு பண்ணீட்டா உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்களே... ஆனா கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணீட்டு டக்குன்னு பேக் அடிச்சிட்டீங்களே... என்னாங்கண்ணா இது...
த‌ங்க‌பாலுவிட‌ம்: தமிழக காங்கிரஸுக்கு த‌லைவரா இருக்கீங்களே... அந்த பதவிக்கு என்ன தான் வேலைன்னு எப்ப‌ சொல்ல‌ப்போறீங்க‌ உலகத்துக்கு...
விஜயகாந்திடம்: வீட்ல தெலுங்குல தான் மாட்லாடுரீங்கலாம்... அப்படியே ஆந்தராவுலயும் ஒரு கிளையை ஆரம்பீங்களேன்...
காடு வெட்டி குருவிடம்: பேச்சையே காணும்... மறுபடியும் மரம் வெட்ட போய்ட்டீங்களா...
அதிரி புதிரியாய் மீண்டும் வருவேன்...

3 comments:

Anonymous said...

அதிரிபுதிரி அய்யாவு(நல்ல வெச்சாங்கயா பேரு)உங்களிடம் ஒரு கேள்வி
எப்படி தலைவா உங்களால மட்டும்?.சூப்பர்.கேள்வி ஒவ்வோன்றும்
சாட்டையடி. இன்னும் கேளுங்க!

Unknown said...

என்னடா இது நாம நினைக்கிறது எல்லாத்தையும் அழகா எழுதிட்டாரே பயப்படாம!

ரெத்தினசபாபதி said...

நன்றி கனிகண்ணன்... நீங்களும் அதான் நினைச்சிங்களோ...