Saturday, 10 October 2009

ஊசிப் பட்டாசா... உரசும் பட்டாசா...

தீபாவளிக்கு முன்னதாகவே புவனேஸ்வரி என்னும் ஊசிப் பட்டாசை கொழுத்திப் போட்டு அலப்பரையை ஆரம்பித்து வைத்திருக்கிறது விபச்சாரத் தடுப்பு(!) போலீஸ்... 'அட.. இது நமத்துப்போனதுப்பா... வெடிக்காது..' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கு மத்தியிலோ ஒரத்திலோ விழுந்து வெடித்துச் சிதறி ப‌லரை சின்னா பின்னமாக்கியது புவனேஸ்வரி விட்ட நைட்ரஜன் ராக்கெட்... அதன் பிறகுத்தான் இது ஊசிப் பட்டாசு இல்லை பலரை உரசும் பட்டாசு என்பது தெரிந்து இப்போது தானை தமிழ்நாடே அடுத்து என்ன என்ற‌ பெரும் கேள்வியோடு அல்லோல கல்லோலப்பட்டு கிடக்கிறது...

ஒரு பக்கம் திரையுலகம் திக்கும் திசையும் தெரியாமல், முக்கும் முனையும் புரியாமல் பதைத்து கொதித்து தெருவிற்க்கு வந்து விட்டது... மறுபக்கம் பத்திரிக்கையுலகம் உருண்டு திரண்டு ஒன்று சேர்ந்து தலையும் காலும் வாலும் புரியாமல் கூடிநின்று கெக்கரிக்கிறது, கொக்கரிக்கிறது... அந்த பக்கம் புவனேஸ்வரி இதுபோல‌வோ அதுபோல‌வோ எதுபோல‌வோ சொல்ல‌வே இல்லை என்று சாராய‌த்தில் அடித்து ச‌த்திய‌ம் செய்கிற‌து காவ‌ல்துறை...

அர‌சுக்கு தின‌ம‌ல‌ரின் மேல் ஏற்கனவே ஒரு க‌ண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் க‌ண்ணி வைக்காம‌லேயே க‌ண்ணியில் வ‌ந்து வலியக்க சிக்கியவர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யாமல் வெறென்ன செய்து திரையுலகினரை திருப்தி செய்யும் அரசு...

இதற்க்கிடையில் அதிரி புதிரிக்கு விளங்கியும் விளங்கி தொலைக்காமலும் சில விசயங்கள் கேழே...

  • எங்கேயோ போன டைனோசரை எதிலேயோ கொண்டாந்து விட்டு இப்படி எல்லோரையும் எங்களைச் சுற்றி நின்னு கும்மியடிக்க விட்டுட்டீங்களேய்யா என்று காவல் துறையை அரசு கடிந்து கொண்டிருக்குமா... இல்லையா..
  • என்னை போட்டோ எடுக்க அனுமதித்தால் நிர்வாணமாக நிற்ப்பேன் என்று கைதின் போது நியூக்ளியர் பாம் போட்ட புவனேஸ்வரியை கண்டு காவல் துறை அரண்டு மிரண்டு அல்லு வாங்கியிருக்குமா இல்லையா...
  • புவனேஸ்வரி கூறியிருக்காமல் தினமலர் லெனின் எப்படி இந்த செய்தியை அவர் சொன்னதாக தைரியமாக வெளியிட்டார் அல்லது வெளியிட முடியும்... அவர் குறிப்பிட்டிருந்த நடிகைகளுக்கும் அவருக்கும் வேறு ஏதாவது உள்குத்து இருந்திருக்குமா...
  • ஓருவேளை லெனின் இதை வெளியிட்டு இந்த விசயம் களேபரம் ஆகாமல் இருந்திருந்தால் சில பிரபல நடிகைகளும், பல பெரும்(!) நடிகைகளும் சிக்கி சின்னா பின்னம் ஆகியிருப்பார்களோ...
  • புவனேஸ்வரி அப்படி கூறியிருந்தால் காவல்துறை அவர்களையும் கைது செய்திருக்குமா... இல்லை புவனேஸ்வரிக்கும் இவர்களுக்கும் ஏதாவது உள்ளே வெளியே ஆட்டத்தில் பைசல் ஆகாத கணக்கிருந்து அதற்க்காகவா இந்த கைது...
  • ஆள் பலம், பண பலம், பதவி பலம் என்று எதையும் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை அசால்ட்டாக சந்திக்கு இழுத்துவிட்டிருக்கும் புவனேஸ்வரி யிடம் இருப்பது தைரியமா, திமிரா, அசட்டுத்தனமா, பொறாமையின் உச்சமா...
  • திரண்ட திரையுலகம் நடிகைகள் கண்ணகிகள் தான் என்று கூவி கூவி பிரகடனப் படுத்தியிருக்கிறார்களே அது யாரை நம்ப வைக்க பத்திரிக்கைகளையா இல்லை பொதுமக்களையா...
  • நடிக நடிகைகள் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதற்க்காக‌ அவர்கள் மேல் எதாவது ஒரு வினோதமான சட்டம் பாயுமா பாயாதா...
  • பத்திரிக்கை துறையும் திரைத்துறையும் ஒன்றுக்கு ஒன்று இரண்டற கலந்தது, இருவரது தயவும் இருவருக்கும் தேவை எனும் பட்ச்சத்தில் மேலும் இந்த பிரச்சனை பூதாகரம் எடுக்குமா... எடுக்காதா...

இந்த விசயத்தில் இத‌ற்க்கு மேற்க்கொண்டு கீழே உள்ள‌து போல் ஒரு நிகழ்ச்சி ந‌ட‌ந்தால் பெரிய ஆச்ச‌ரிய‌ம் ஒன்றும் இருக்கப்போவதில்லை தானே...

'இரு துறைக‌ளுமே என் இரு க‌ண்க‌ளை போன்ற‌து... இதில் எந்த‌ க‌ண்ணில் த‌ண்ணீர் வ‌ந்தாலும் என் ம‌ன‌து உடைந்து போகும்...' என்று அந்த கண்கள் க‌ல‌ங்க‌ முத‌ல்வ‌ர் இரு துறையையும் கூட‌ வைத்துக்கொண்டு போட்டோவிற்க்கு போஸ் கொடுக்க‌லாம்... அதை தொடர்ந்து, மான‌ங்கெட்ட‌வ‌ன் ம‌த்தியான‌ம் குடிச்சா என்ன‌ சாயாங் கால‌ம் குடிச்சா என்ன‌... போதை வ‌ந்தா ச‌ரி தாங்கற‌ மாதிரி இருதுறையும் சேர்ந்து 'ச‌மாதான‌ம் செய்து வைத்த‌ ச‌ரித்திர‌ நாய‌கன்' என்கிற‌ ப‌ட்ட‌தை முதல்வருக்கு கொடுக்க‌ ஒரு விழா எடுப்பார்க‌ள்... அந்த‌ விழாவில் இரு துறையின‌ரும் ஒருவ‌ரை ஒருவ‌ர் புக‌ழ்ந்து கொண்டு கூட‌வே முத‌ல்வ‌ரையும் புக‌ழ்வார்க‌ள்... முத‌ல்வர் புன்முறுவலிட்டப்படி ரசிப்பார்...

நான்கு சுவத்துக்குள் நடக்கும் இந்த கண்றாவியை படம் பிடித்து ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரமாகப் பார்த்து குடும்ப தொலைக்காட்சியில் குளோசப்பில் ஒளிப்பரப்பித் தொலைப்பார்கள்... அதை வேண்டா வெருப்பிற்க்கு பார்த்து நமக்கு கண்டாமிருக காய்ச்சல் வரும் அபாயம் வரும்... எதற்க்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தானே...

3 comments:

Anonymous said...

மார்கழிக்கு வாழ்த்துக்கள் .கவிதைகள்,கதைகள் மட்டுமில்லாமல்
நிகழ்வுகளையும் உங்கள் ஸ்டைல்லில் பின்னி பெடலெடுக்க
ஆரம்பிசீட்டீங்களா!.கலக்குங்க.

எல்லாரோட கமெண்ட்ஸ்யும் நீங்களே சொல்லீடீங்க!

சுரேசு said...

என்ன ஒரு திணுசாதான் போவுது... கலகத்தை ஆரம்பியுங்கள்..... கவுண்ட் டவுன் ஆரம்பம் உள்ளேயா....வெளியேயா........

ரெத்தினசபாபதி said...

கருத்துக்கு நன்றிங்க செல்வி... உங்க‌ ஆசி இருந்தா தொடர்ந்து க‌ல‌க்குவோம்...