Friday 9 October 2009

வாழ்த்துக்கள்!

தமிழக நடிகைகள் அடித்துக்கொண்டிருக்கும் கூத்துக்கும் கூம்மாளத்துக்கும் மத்தியில் சத்தமில்லாமல் நோபல் பரிசு வென்ற தமிழர் வெங்கட்ராமனை மார்கழி பூங்கொத்தும் புன்னகையும் கொடுத்து வாழ்த்துகிறது.

ஆடியில் காத்தடிக்கும்போது தான் தெரியும் அம்மிக்கல்லின் அவசியம்ங்கர மாதிரி வெங்கட்ராமன் பரிசு பெற்ற பிறகு தான் அவரை எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காசு கொடுத்து வாங்கலைனாலும் பச்ச மிளகாய் ஒரைக்குமாம் அது மாதிரி பிறப்பை கொடுத்த தமிழ்நாடு ஒரு பக்கம், பள்ளி படிப்பை கொடுத்த குஜராத் ஒரு பக்கம், கேம்பிரிட்ஜில் வேலை கொடுத்த பிரிட்டன் ஒரு பக்கம், குடியுரிமை கொடுத்த அமெரிக்கா ஒரு பக்கம்னு வளைச்சி வளைச்சி கொண்டாடுறாங்க... கத்தரிக்கா முத்தினா சந்தையில ஏது விலை... இளசா இல்லன்னாலும் மவுசா இருந்திட்டா இப்பிடித்தான்... எது எப்பிடி இருந்தா என்ன... நமக்கு பெருமை நம்ம தமிழ் உயிரணுக்கள் தான் அவுரு உடம்புலயும் ஓடுது அப்படிங்கறதுதான்...

அட... ஆமாம்பா... அவர் கண்டுபிடுச்சதும் இது சம்மந்தப்பட்டது தான்... உயிரணுக்கள்ள இருக்கிற DNAகள் கொடுக்கிற கட்டளைகளை வைத்துதான் ரீபோசோம்கள உடலுக்கு தேவையான அனைத்து புரோட்டின்களையும் உற்பத்தி செய்கின்றன... DNAகள் கொடுக்கிற கட்டளைகளை ரீபோசோம்கள் எப்பிடி புரிஞ்சிக்குதுங்கற‌த அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி மேஞ்சிருக்காராம் நம்மாளு... அத தெரிஞ்சிகிட்டா நோய் உண்டாக்கிற கிருமிகல்ல இருக்கிற ரீபோசோம்கள கட்டுப்படுத்தி நோயை குறைக்கலாமாம்... அதாவது போட்டுல அடிச்சி பொறி கலங்கற மாதிரி சொல்லனும்னா உடம்புல இருக்கிற கெட்ட ரெத்தத்தையெல்லாம் நல்ல ரெத்தமா மாத்துறமாதிரி... அடடா... அப்டின்னா அத உடனே நம்ம அரசியல்வாதிகளுக்கு செஞ்சாகனுமே... வெங்கட் சார்... எப்ப வர்றீங்க சென்னைக்கு...

3 comments:

Anonymous said...

மார்கழி பல்சுவை தளமாக உருவாகிக்கொண்டிருகிறது.சுவை பட எழுதி இருக்கிறீர்கள்.வரிகளில் உங்கள் உழைப்பு தெரிகிறது.வாழ்த்துக்கள்
காசு கொடுத்து வாங்கலைனாலும் பச்ச மிளகாய் ஒரைக்குமாம் கமெண்ட்டை
ரொம்பவே ரசித்தேன்

Unknown said...

அர்த்தமுள்ள வாழ்த்துக்கள்!!

ரெத்தினசபாபதி said...

நன்றி கனி...